குப்பை கொட்டுவோரைக் கண்டறிய கண்காணிப்புக் கமராக்கள் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும்  பணிப்பு!

Wednesday, October 7th, 2026


…
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக தண்டம் அறவிடும் நடவடிக்கைகளை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள், நிறுவனங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்  (06.10.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலேயே குப்பை முகாமைத்துவம் தொடர்பான இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்கள் தமது பிரதேசங்களில் குப்பை கொட்டப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்புக் கமராக்களை பொருத்தி, விதிமுறைகளை மீறுவோரைக் கண்டறிந்து தண்டம் அறவிடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

கண்காணிப்புக் கமராக்கள் மூலம் குப்பை கொட்டுவோரைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் நல்லூர் பிரதேச சபையின் செயற்பாட்டை பாராட்டிய ஆளுநர், அந்த நடவடிக்கையின் ஊடாக சுமார் 8 இலட்சம் ரூபா வரை தண்டத் தொகை அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனவும் சுட்டிக்காட்டினார்.

நல்லூர் பிரதேச சபையின் இந்த நடைமுறையை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் பின்பற்றி, பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் குப்பை கொட்டப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106