எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு ஈரானுடனான போர் காரணமல்ல – ட்ரம்ப்!

Wednesday, October 7th, 2026

அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு ஈரானுடனான போர் காரணமல்ல எனவும், அதற்கு ஜனநாயகக் கட்சியும் யுக்ரைனுமே பொறுப்பு எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை தொடர்பான விமர்சனங்களை ஈரானுடனான போரிலிருந்து திசைதிருப்பி, ஜனநாயகக் கட்சி மற்றும் யுக்ரைன் மீது சுமத்த ட்ரம்ப் முயற்சிப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாக தற்போது சாதனை அளவில் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதால், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆளும் கலிபோர்னியா உள்ளிட்ட மாநிலங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், போர் ஆரம்பமானதன் பின்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடான தினசரி எண்ணெய் ஏற்றுமதி சுமார் 97 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவில் ஒரு கலன் பெட்ரோலின் சராசரி விலை தற்போது 4.36 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவான 4.14 அமெரிக்க டொலர் விலையை விட அதிகமாகும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது முதலாவது தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் பெப்ரவரி 28ஆம் திகதி, ஒரு கலன் பெட்ரோலின் சராசரி விலை 2.98 அமெரிக்க டொலராக காணப்பட்டதாக அமெரிக்க ஒட்டோமொபைல் சங்கத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106