நைஜீரியாவில் மூன்று நாள் தேசிய துக்கம்!

Wednesday, October 7th, 2026

நைஜீரியாவில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆபிரிக்காவின் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான விமான அனர்த்தங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.

தெற்கு நைஜீரியாவின் பெனின் நகரத்திலிருந்து வர்த்தக தலைநகரான லாகோஸ் நோக்கி வழக்கமான கண்காணிப்பு மற்றும் பணிகளுக்காகப் புறப்பட்ட குறித்த விமானம், தென்மேற்கு ஒன்டோ மாகாணத்தின் இக்போகோடா பகுதியில் காலை ஒன்பது மணியளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது ஆயுதப் படைகளுக்கும் முழு நாட்டிற்கும் மிகுந்த வேதனையளிக்கும் தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த விமானப்படை அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பயோ ஓனனுகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்நாட்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106