கடந்த ஆட்சியல் அனுமத்தி மறுக்கப்பட்ட 4 மதுபானசாலைகளுக்கு அநுரா அரசில் அனுமதி!

Wednesday, October 7th, 2026


….
கடந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் யாழில் அனுமதி மறுக்கப்பட்ட 4 மதுபானசாலைகளுக்கு  தற்போதைய அநுரா அரசில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளின் அனுமதிக்கான பணம் பிரதேச செயலகங்களில் நேற்றுமுந்தினம் செலுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சியில் பல அரசியல்வாதிகளின் சிபார்சின் பெயரில் நூற்றிற்கும் மேற்பட்ட மதுபானசாலை புதிய அனுமதிகள்  வழங்கப்பட்டன.

அவ்வாறு வழங்கிய அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம்கொண்டவர்களிற்கு கோடிக்கணக்கான பெறுமதிகளில் கை மாறியது.

கை மாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் அதிக எதிர்ப்பு காரணமாக அதற்காட அனுமதிப் பத்திரங்களை வழங்க பிரதேச செயலகங்கள் மறுத்து விட்டன.

மறுக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்கள் சார்பில் தீர்ப்பு கிட்டியதனால் தீர்ப்பின் அடிப்படையில் அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான பணத்தை செலுத்த நேற்றைய தினம் பிரதேச செயலகங்களை நாடினர்.

இதில் சங்கானை, கோப்பாய் தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் நேற்றைய தினம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளிற்கு எதிராக குரல்கொடுப்போம் இது ஊழல் மோசடியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் என அநுரா அரசு பதவியேற்ற காலம் முதல் என்.பி.பி அரசு கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106