இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 6th, 2026


…..
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் 860 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,403 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிவரை 12 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், தொற்று கண்டறியப்பட்ட வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.

புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் ஆண்களின் விகிதமே அதிகமாகக் காணப்படுவதுடன், ஆண்-பெண் விகிதம் 7:1 ஆக உள்ளது.

மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமென வலியுறுத்தியுள்ள சுகாதார அதிகாரிகள், இலங்கை உட்பட 21 நாடுகளில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதாக ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106