யாழ்.பொது மலசலகூட விவகாரம் -இருதரப்பும் பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
Sunday, October 4th, 2026
……
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு, யாழ் மாநகர சபையும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையும் சுமூகமான இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் மாநகர சபையின் மாதாந்த அமர்வின் தொடர்பிலான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று இன்று (4) கட்சியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை குறித்து இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்கு நாளாந்தம் பெருமளவான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள், வர்த்தக நடவடிக்கைகளுக்காக நகருக்கு வரும் பொதுமக்கள், மருத்துவத் தேவைக்காக வருபவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நீண்டகால தேவை காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த எமது ஆட்சிக்காலத்தில் அமைவிடம் மற்றும் நிதி மூலம் என்பன உறுதிசெய்யப்பட்டு இத்திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டு யாழ் மாநகரசபை மற்றும் இ.போ.சா ஆகிய இருதரப்பு இணக்கப்பாட்டுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் தேவையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மலசலகூடம் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
மக்களின் தேவைக்காக நிர்மாணிக்கப்பட்ட பின்னரும், நிர்வாக ரீதியான அல்லது உரிமை சார்ந்த பிரச்சினைகள் காரணமாக அது பயன்படுத்தப்படாமல் இருப்பது அந்த வசதியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் யாழ் மாநகர சபையும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தகது.
குறித்த கலந்துரையாடலில் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர்களுடன், யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், முக்கியஸ்தர் கந்தசாமி கமலேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106