ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை – சவூதி அரேபியா திட்டமிட்ம்!
Sunday, October 4th, 2026
செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க சவூதி அரேபியா திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படலாம் எனவும், சவூதி அரேபியாவின் மேற்பார்வையில் யேமன் அரசுப் படைகள் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சவூதி வான்ப்படை ஆதரவு வழங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டெப் கடல்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இராணுவ நடவடிக்கையின் இறுதி திட்டம் மற்றும் தொடக்கத் திகதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106