ஆய்வக பெண் ஊழியர், பிளேக் நோய்த் தொற்றுக்கு இரையாகி உயிரிழப்பு!

Sunday, October 4th, 2026

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள இர்குட்ஸ்க்  பிளேக் தடுப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 28 வயதான டார்யா ஷிபிலோவா என்ற பெண் ஆய்வக ஊழியர், பிளேக் நோய்த்தொற்றுக்கு இரையாகி உயிரிழந்துள்ளார்.

ஆய்வகத்தில் பரிசோதனைக்கான மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, உயிருள்ள பிளேக் பேக்டீரியாக்கள் அடங்கிய கண்ணாடி குழாய் தவறி விழுந்து உடைந்ததால் அவருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தீவிர நியூமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண் சிகிச்சை பெற்ற ஷெலிகோவ் மாவட்ட மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 197 பேர் உடனடியாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் பாதிக்கப்பட்டிருந்தது பிளேக் நோயின் மிகவும் தீவிரமான ‘நியூமோனிக் பிளேக்’ வகையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது இருமல் மற்றும் மூச்சுத் திவலைகள் மூலம் மனிதரிடமிருந்து மனிதருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது என்பதால், இர்குட்ஸ்க் பகுதியில் பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறியதால் ஏற்பட்ட மரணம் குறித்து ரஷ்ய சுகாதாரத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் எவருக்கும் இதுவரை நோய்க்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், அவர்களின் பரிசோதனை முடிவுகள் நோய்த்தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் ஈகோர் கோப்சேவ் தெரிவித்துள்ளார்.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106