சாரதி அனுமதிப்பத்திரம், இலக்கத் தகடுகள்தாமதம் –  45 நாட்களுக்குள்அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

Sunday, October 4th, 2026


……
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் கேள்விப்பத்திரக் கொள்முதல் செயன்முறைகள் குறித்து முறையான விசாரணையை நடத்தி, 45 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தின் போது, 2026 மார்ச் 10 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அச்சிடுவதற்காக நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை சுமார் 678,000 ஆகக் காணப்படுகின்றது.

நாளொன்றுக்கு சுமார் 4,600 அனுமதிப்பத்திரங்களை மட்டுமே அச்சிடக்கூடிய நிலை காணப்படுவதால் இந்நிலுவை மேலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலுவைக்கு விரைவான தீர்வாக, ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் இரண்டு புதிய அச்சு இயந்திரங்களை நிறுவி, நாளாந்த அச்சிடும் திறனை 8,200 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வரை உயர்த்த எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இக்கூட்டத்தில் கூரை மீது பொருத்தப்படும் சூரியப்படலங்கள் மற்றும் மின்கல மின்சக்தி சேமிப்பு கட்டமைப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

நுகர்வோர் மட்டத்தில் மின்சாரப் பயன்பாட்டை நிர்வகிக்க 400,000 ஸ்மார்ட் மீற்றர்களை (Smart Meters) நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 180 அலகுகளுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106