பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யுங்கள் – புங்குடுதீவு மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

Saturday, October 3rd, 2026


…….
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமான பேரணி, நடைபவனியாக பெருங்காட்டு சிவன் ஆலயம் வரை சென்று நிறைவடைந்தது.

இதன்போது பங்கேற்ற மாணவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், கல்விக்கு முன்னுரிமை வழங்குதல், தீவகப் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அத்துடன், புங்குடுதீவு தீவின் மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்ற வேண்டும் என்றும், சிறுவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழக்கூடிய சமூகச் சூழலை உருவாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

“எங்கள் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதிசெய்யுங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்த மாணவர்கள், சிறுவர்களின் உரிமைகள் மற்றும் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான சமூகச் சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106