இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ஆடுகளம் மீது கம்பீர் கடும் கடும் அதிருப்தி!

Friday, October 2nd, 2026


….
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான கவுகாத்தி ஒருநாள் போட்டியில் மொத்தமாக 811 ஓட்டங்கள் குவிக்கப்பட்ட நிலையில், ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகவும், பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லாத வகையிலும் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கம்பீர்,

“உண்மையைச் சொல்வதானால், துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்கும் இடையில் இன்னும் அதிகமான போட்டித்தன்மை இருக்க வேண்டும்.

நாம் கிரிக்கெட் பற்றிப் பேசுகிறோம். ஆனால், இப்போது கிரிக்கெட்டை விட துடுப்பாட்டத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல் தெரிகிறது.

ஒரு இளம் பந்துவீச்சாளர் இவ்வாறான ஆடுகளத்தில் பந்துவீச வேண்டிய நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்.

எதிரணி 400 ஓட்டங்களைக் குவிக்கிறது. பின்னர் நீங்களும் 400 ஓட்டங்களை விரட்ட வேண்டியுள்ளது.

சாதனைகள், ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.

ஆனால், உண்மையான கிரிக்கெட் ரசிகராகவும் பயிற்சியாளராகவும் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

இவ்வாறான ஆடுகளத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு நியாயமானதல்ல.

பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவுக்காவது சாதகமான சூழ்நிலைகள் வழங்கப்பட வேண்டும்.

பந்துவீச்சாளர்களின் புள்ளிவிபரங்களை மட்டும் வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. சில நேரங்களில் அவர்களின் உண்மையான ஆட்டத்திறனை விட புள்ளிவிபரங்கள் மோசமான தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

தவறு செய்வதற்கான வாய்ப்புகூட அவர்களுக்கு மிகவும் குறைவாக உள்ளது என்றார்.

அத்துடன் நவீன ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

30 யார் வட்டத்துக்குள் ஐந்து களத்தடுப்பாளர்கள் மட்டுமே இருக்க முடியும். இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதேநேரம் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஓட்டக் குவிப்பும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பந்துவீச்சாளர்களுக்கு மாற்று வழிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

சரியான இடங்களில் பந்துவீசுவதைத் தவிர அவர்களிடம் அதிக வாய்ப்புகள் இல்லை என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106