அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை – ஒரு மில்லியன் அபராதம்!

Friday, October 2nd, 2026


…….
கொழும்பு, பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 100 ரூபாவுக்கு விற்பனை செய்தமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடிநீர் போத்தலுக்கான அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாகும்.

இதனைவிட 20 ரூபா அதிகமாக விற்பனை செய்தமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.

கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டை நிறுவனம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

2492/29 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட 96ஆம் இலக்க ஆணையின்படி, 500 முதல் 999 மில்லிலீற்றர் வரையிலான குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குடிநீர் போத்தலுக்கான விலை மற்றும் தங்களிடம் அறவிடப்படும் தொகையை நுகர்வோர் ஒப்பிட்டுப் பார்க்குமாறும், அதிக விலை அறவிடப்பட்டால் அதற்கான ஆதாரமாக ரசீதுகளைப் பாதுகாத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106