ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை நவீனமயமாக்க புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு!
Thursday, October 1st, 2026
…..
இலங்கையின் பாடசாலைக் கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் 2019 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் முறைமைக்கு 2023 மார்ச் 01 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இதற்கமைய, முதற்கட்டமாக தரம் 01 மற்றும் தரம் 06 இற்கு புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்களை 2026 ஆம் ஆண்டிலும், தரம் 10 இலிருந்து தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய கல்வி நிறுவகத்தினால் மீளாய்வு செய்யப்பட்ட புதிய கருத்துத் தாள் மற்றும் தேசிய செயல்பாட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) கல்விசார் பேரவை மற்றும் பேரவைச் சபை ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், 2027 ஆம் ஆண்டில் தரம் 02 மற்றும் தரம் 07 இற்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காகக் தரம் 1, 2, 3, 6 இற்கான பாடப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள், பாடசாலை மட்ட மதிப்பீட்டு வழிகாட்டிகள் மற்றும் மாகாண மட்ட ஆசிரியர் பயிற்சிகளைத் துரிதமாக முன்னெடுக்கக் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106