ரஷியாவின் இராணுவ விமானம் விபத்து – 6 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!
Thursday, October 1st, 2026
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமூர் பிராந்தியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட Tu-95 விமானம் செப்டம்பர் 29-ம் தேதி பயிற்சி விமானத்தின்போது அமூர் பிராந்தியத்தில் உள்ள மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 7 பேர் இருந்ததாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Tu-95 என்பது சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்டதூர குண்டுவீச்சு விமானமாகும். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானம், ரஷிய ராணுவத்தின் முக்கிய நீண்டதூர விமானங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த விமானம் தற்போது உக்ரைன் மீது தொலைதூர ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106