அபிவிருத்தி செய்ய பிரேசிலுடன் ஒப்பந்தம்!
Thursday, October 1st, 2026
…..
இலங்கைக்கும் பிரேசில் இற்கும் இடையே 2008 செப்டம்பர் 16 கையெழுத்தான அடிப்படைத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் பால் கைத்தொழில் மற்றும் கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்காகப் பிரேசில் அரசாங்கம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உடன்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் பிரேசிலில் இருந்து வருகை தந்த உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவின் களஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரேசில் வெளிவிவகார அமைச்சின் பிரேசில் ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (ABC), விக்கோசா கூட்டாட்சிப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றிற்கு இடையே ‘இலங்கையில் பால் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்திற்கான’ தொழில்நுட்பச் சட்டக்கட்டமைப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
இதன் மூலம் உள்நாட்டுப் பால் உற்பத்தியை அதிகரித்து, பண்ணையாளர்களின் தொழினுட்பத் திறனை உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106