தேர்தலுக்கு முன்பே சேறடிப்பு ஆரம்பம் – உதயன் செய்தி குறித்து டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, September 30th, 2026
……
தேர்தல் காலங்களில் வழக்கமாக தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்பு பிரசாரங்கள், இம்முறை தேர்தலுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கசியின் தலைமை அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்த அவர் மேலும் கூறுகையில் –
வழக்கமாக தேர்தல் காலங்களில் எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்புக்கள் தற்போது தேர்தலுக்கு முன்பதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நப்பாசையில் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருகின்ற உதயன் பத்திரிகை தற்போதும் தவறான தகவல்களை வெளியிடுள்ளது.
மேலும் உதயன் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது போன்று தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் எவையும் மேற்கொள்ளப்பட வில்லை.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இல்லை, யாரும் எமது அலுவலகத்திற்கு வரவும் இல்லை.
சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதாவது, அசாத் மௌலானா சனல் 4 தெலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மைமை உறுதிப்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் சொல்லப்பட்டு்ள்ளது.
அந்தவகையில், என்னுடன் தனக்கு தொடர்பு இருந்ததாக அசாத் மௌலானா சொல்லியிருந்தவை தொடர்பான எனது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தேன்.
இதுதொடர்பான சில உறுதிப்படுத்தப்படாத தகவலை அறிந்து கொண்ட உதயன் பத்திரிகை, எமக்கு களங்கத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதற்கான தமது வழக்கமான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், குறித்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தான் வழங்கிய பதில்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்தார்.
தன்னைப் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உதயன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106