உதயன் பத்திரிகையிடம் ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரி டக்ளஸின் சட்டத்தரணி கடிதம்!

Tuesday, September 29th, 2026


……….
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கடந்த 25.09.2026 அன்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டு, ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரி அவரது சட்டத்தரணியினால் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நஷ்டஈடாக ரூ.100 மில்லியன் வழங்க வேண்டும் எனவும் சட்டத்தரணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது வீட்டில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தீவகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் உண்மையானவை அல்ல எனச் குறிப்பிட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணி, தமது கட்சிக்காரரின் புகழுக்கும் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 23.09.2026 அன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம், அஸாத் மௌலானா தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தவறான செய்தி உதயன் பத்திரிகையில் விசமத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களிலும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக உதயன் பத்திரிகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில தொடர்பான வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும் சட்டத்தரணி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106