பொலித்தீன் விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை!
Monday, September 28th, 2026
…..
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பன இணைந்து முன்னெடுத்த இரண்டு விசேட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 2,040 கிலோகிராம் நிறையுடைய தடைசெய்யப்பட்ட பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மற்றும் சட்டரீதியான விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய உணவுப் பொதித்தாள்களை இலக்கு வைத்தே இந்த கூட்டுச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
2017ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதியிடப்பட்ட 2034/34 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, HDPE, LDPE மற்றும் பொலிபுரோப்பலீன் (polypropylene) உள்ளிட்ட பொலித்தீன் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உணவுப் பொதித்தாள்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்கு வைத்தல், காட்சிப்படுத்தல், இலவசமாக விநியோகித்தல் அல்லது பயன்படுத்துதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, 2019ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதியிடப்பட்ட 2151/58 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கீழ் வெளியிடப்பட்ட 70ஆம் இலக்க கட்டளைக்கு அமைவாக, உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் லஞ்ச் சீட் பொதிகளில் வர்த்தக நாமத்தின் பெயர், அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தியாளரின் விவரங்கள், உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி, பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதிவு இலக்கம் உள்ளிட்ட விடயங்களைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறான சூழல் பாதுகாப்பு மற்றும் லேபிளிடல் விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுமாறு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம், நுகர்வோர் லஞ்ச் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் உறைகளில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சந்தையில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்பிலான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106