இரசாயன உரங்களிலுள்ள நைட்ரேட், நிலத்தடி நீரில் மிக மோசமாகக் கலந்துள்ளது – வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் எச்சரிக்கை!
Monday, September 28th, 2026
……..
புகையிலைப் பயிர்ச்செய்கைக்காகக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களிலுள்ள நைட்ரேட், நிலத்தடி நீரில் மிக மோசமாகக் கலந்துள்ளதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
குடிநீரில் அதிகளவு நைட்ரேட் கலப்பது பெருங்குடல் புற்றுநோயுடன் நேரடித் தொடர்புடையது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24.09.2026 அன்று நடைபெற்ற JMA மாநாட்டில், “Groundwater Dependence and Drinking-Water Quality in the Jaffna Peninsula: A Synthesis of Census Trends (2012–2024) and a Rapid Review of the Northern Water Repository” என்ற தலைப்பில் எனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தேன்.
அந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்தும் செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகவும், ஆழமாகச் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.
பல தசாப்தங்களாக யாழ்ப்பாண மண்ணில் அதிகளவில் பயிரிடப்பட்டு, நாலாபுறமும் ஏற்றுமதி செய்யப்பட்ட புகையிலை, உலகெங்கும் புற்றுநோயை விதைத்த ‘கர்மா’ இன்று சொந்த மண்ணையே திருப்பித் தாக்குகிறதோ என்ற அச்சம் எழுகிறது.
புகையிலைப் பயிர்ச்செய்கைக்காகக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களிலுள்ள நைட்ரேட் (Nitrate), நிலத்தடி நீரில் மிக மோசமாகக் கலந்துள்ளது.
யாழ்ப்பாண மக்களின் முதன்மையான குடிநீர் ஆதாரம் இந்த நிலத்தடி நீரே. குடிநீரில் அதிகளவு நைட்ரேட் கலப்பது பெருங்குடல் புற்றுநோயுடன் நேரடித் தொடர்புடையது என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாகப் புகையிலை பயிரிட்டவர்களின் அறியாமையால் செய்யப்பட்ட வினையின் பலனை, இன்று எந்தப் பாவமும் அறியாத அப்பாவி யாழ்ப்பாண மக்கள் தமது குடிநீரின் ஊடாக அனுபவிக்க நேரிட்டுள்ளது பெரும் சோகம்.
சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் பிரிக்க முடியாதவை. நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கவும், மாற்றுப் பயிர்ச்செய்கை முறைகளை முன்னெடுக்கவும் உடனடியாக விழிப்புணர்வு பெறாவிட்டால், இதன் பாதிப்பு வரும் தலைமுறைகளையும் விட்டுவைக்காது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106