வலி வடக்கு பிரதேச சபை – ஈ.பி.டி பி. கட்சியின் நிலைப்பாடு தொடர்பி!ல் டக்ளஸ் தலைமையில் கூட்டம்!
Monday, September 28th, 2026
………….
வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நேற்று(27.09.2026) இடம்பெற்ற கலந்துரையாடலில், கீரிமலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், குறித்த விவகாரத்தின் அடிப்படையில் கடந்த வாரம் சபையின் மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை, கொட்டப்பட்ட குப்பை தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களின் தற்போதைய தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், வலி வடக்கு பிரதேச சபையின் அடுத்த அமர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.
ஈ.பி.டி.பி. கட்சியின் வலி வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.ஜெயபாலசிங்கம் (அன்பு), பிரதேசத்திற்கான மேலதிக அமைப்பாளர் பா.ஸ்ரீதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார செயற்பாட்டாளர் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன்(ஜீவன்) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106