இலங்கை படுதோல்வி – இங்கிலாந்து  223 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Monday, September 28th, 2026


…..
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி லண்டன் ‘தி ஓவல்’ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டொம் பென்டன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 126 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் திறமையாகப் பந்துவீசிய அசித பெர்னாண்டோ 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 356 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.1 ஓவர்களில் 132 ஓட்டங்களை பெற்றிருந்த போது சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் 26 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியம் டவ்சன் 3 விக்கெட்டுகளையும் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 223 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106