தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
Monday, September 28th, 2026
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமாவின் (Temba Bavuma) அபார சதம் (103) தென்னாப்பிரிக்க அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர் தனது சிறப்பான துடுப்பாட்ட திறமையை வெளிகாட்டி 79 பந்துகளில் 142 ஓட்டங்களை விளாசினார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 365 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜேக் எட்வர்ட்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
366 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மிட்செல் மார்ஷ் (84) மற்றும் டிராவிஸ் ஹெட் (84) ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
எனினும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதிக்கட்டத்தில் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்து சேவியர் பார்ட்லெட் போராடிய போதிலும், அவுஸ்திரேலிய அணி 48.1 ஓவர்களில் 333 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் தொடரைக் கைப்பற்றியது.
அதிரடி சதம் விளாசிய டேவிட் மில்லர் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106