பால் போத்தல்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட சோதனை!

Monday, September 28th, 2026


….
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் போத்தல்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட சோதனைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 144 விசேட சோதனைகளின் போது, 1,400க்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் நீதிமன்றச் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் நடவடிக்கைகளில், அவற்றில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பான 96 சோதனைகளும், குழந்தைகளுக்கான பால் போத்தல்கள் தொடர்பான 48 சோதனைகளும் அடங்குகின்றன.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் போத்தல்களைக் கொள்வனவு செய்யும் போது, தயாரிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நன்கு பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் SLS தரச்சான்றிழ்க்கான இலச்சினை இல்லாத காரணத்தினால் மட்டும், அந்தப் பொருட்களைச் சட்டவிரோதமானது எனத் தீர்மானிக்க முடியாது என்றும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

0006



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106