மாதகல் கடற்பரப்பில் 80 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Sunday, September 27th, 2026


……
யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதகல் குசுமந்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் பயணித்த படகு கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சுமார் 35 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 45 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை சுமார் 80 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகபொலிசார் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106