‘அமன் மேலா’ குண்டுவெடிப்பு -11 பேர் பலி – பாகிஸ்தானில்  பதற்றம்!

Sunday, September 27th, 2026

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்து நாட்டின் ‘Rescue 1122’ அவசர நிவாரணச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் தராசின்டா பகுதியில் உள்ள ‘அமன் மேலா’ என்ற இடத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் குறித்து அறிந்ததும் தராசின்டா பிரதேச மையத்தின் அவசர நிவாரணக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று , காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி வழங்கி அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106