தனிப்பட்ட விபரங்களை மிகவும் துல்லியமாகச் சரிபாருங்கள் – பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்து!…..
Sunday, September 27th, 2026
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும்போது, விண்ணப்பதாரர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் இது குறித்து தெரிவிக்கையில் –
தற்போது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாலினம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடங்கள் உள்ளிட்ட விபரங்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இவ்வாறு பதிவேற்றப்படும் பெயர்களில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவதோ அல்லது பெயரின் ஒரு பகுதி விடுபடுவதோ எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, பரீட்சை எழுதி 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட தேவைகளின்போதும் பெயர் தொடர்பான முரண்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளால் இணையவழியில் பதிவேற்றப்படும் பெயர்களில் பரீட்சைத் திணைக்களம் தன்னிச்சையாக எந்த மாற்றங்களையும் மேற்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு எழுத்தில் ஏற்படும் மாற்றம் கூட பின்னர் வேறுபட்ட பெயராகக் கருதப்படக்கூடும் என்பதால், பெயர் தொடர்பான தகவல்களை ஆரம்பத்திலேயே சரியாகப் பதிவு செய்வது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சை அனுமதி அட்டை வெளியிடப்பட்ட பின்னர், அதில் பெயர், பாடங்கள் அல்லது பாலினம் உள்ளிட்ட விபரங்களில் ஏதேனும் பிழைகள் காணப்பட்டால், அவற்றைத் திருத்துவதற்காக குறிப்பிட்ட காலப்பகுதி மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பாடசாலைகளில் மாணவர்களின் விண்ணப்ப விபரங்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்னர், அதிபரால் சரிபார்ப்பதற்காக வழங்கப்படும் படிவத்தில் தங்களது பிள்ளைகளின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் சரியாக உள்ளனவா என்பதை பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனமாகச் சரிபார்த்து கையொப்பமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், அதில் ஏதேனும் பிழைகள் காணப்பட்டால், பாடசாலை அதிபர் ஊடாக உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106