சிறைச்சாலைக்குள் மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க விசேட வேலைத்திட்டம்!
Saturday, September 26th, 2026
……..
சிறைச்சாலைகளுக்குள் எதிர்தரப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காத வகையில், அவர்களை அந்தந்த சிறைச்சாலைகளிலேயே தனித்தனியாக தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், சிறைச்சாலைகளுக்குள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் ஹரக் கட்டா ஆகியோருக்கு இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த கொஸ்மல்லியின் தரப்பினருக்கும் படோவிட்ட அசங்கவின் தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படவிருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106