வருகின்றது கிரிக்கெட் சட்டமூலம் – வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Wednesday, September 23rd, 2026


…..
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை மறுசீரமைப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை’ அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதன் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட வரைவுக்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வகிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளுக்கான சட்டப் ஏற்பாடுகளை வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கமாகும்.

மேலும் நல்ல ஆளுமை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்குச் செயல்படுவதும், இதில் பங்கேற்பாளர்கள் அனைவரின் நலனைப் பாதுகாப்பதும் இதன் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும்.

இவற்றுடன், ஊழல் மற்றும் பிற தவறான நடவடிக்கைகளில் இருந்து கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளும் இச்சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106