தொடர் நெருக்கடி – இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம் – கேரள பல்கலை ஆய்வில் தகவல்கள்!

Tuesday, September 22nd, 2026


…..
போர், கொரோனா பெருந்தொற்று, பொருளாதாரச் சுமை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற தொடர்ச்சியான நெருக்கடிகள் காரணமாக, இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பல அடுக்கு மன உளைச்சல்களையும் பல்வேறு இழப்புகளையும் சந்தித்துவருவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கேரளப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மித்திலமாறன் தெய்வேந்திரன் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

பேரிடர்களால் ஏற்படும் உளவியல் தாக்கங்களைத் தனித்த நிகழ்வுகளாகப் பார்க்க முடியாது. மீண்டும் மீண்டும் ஏற்படும் நெருக்கடிகள் மக்களின் உணர்வுரீதியான பாதிப்புகளைத் தீவிரமாக்கி, அவர்கள் அதில் இருந்து இயல்பு நிலைக்கு மீண்டு வருவதைக் கடினமாக்குகின்றன.

இலங்கையின் கடந்த கால நெருக்கடிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் வெறும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களுடன் நின்றுவிடவில்லை. மாறாக வீடுகள், வாழ்வாதாரங்கள், சமூக வலைப்பின்னல்கள், பொருளாதார பாதுகாப்பு மற்றும் வாழ்வின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மக்கள் இழப்பதற்கும் வழிவகுத்துள்ளன.

ஏற்கனவே மோதல்கள், இடப்பெயர்வு, உறவுகளை இழந்த துயரம் அல்லது பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் புதியதொரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். அந்த வகையில், ‘டிட்வா’ சூறாவளி போன்ற சமீபத்திய நிகழ்வுகள் மக்களின் கடந்த கால அதிர்ச்சிகரமான அனுபவங்களை நினைவூட்டி, தீவிர உணர்வுரீதியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

கவலை, மனச்சோர்வு, பயம், உணர்வுரீதியான சோர்வு மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை மக்கள் மத்தியில் பொதுவான உளவியல் தாக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அனர்த்தங்கள் சம்பவிக்கும் வேளையில் உடனடிப் பொருள் உதவிகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல், மக்களின் கடந்தகால துயரங்களையும் மன வடுக்களையும் கருத்தில் கொண்டு நீண்டகால மனநல மற்றும் சமூக-உளவியல் ஆதரவை வழங்க வேண்டியது அவசியமாகும் என மித்திமாறன் தெய்வேந்திரனின் ஆய்வு வலியுறுத்தியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106