ஆசியப் பிராந்திய நாடுகளில் இளைஞர்களிடையே அதிக வேலையின்மை வீதம் நிலவும் நாடாக இலங்கை!

Tuesday, September 22nd, 2026

ஆசியப் பிராந்திய நாடுகளில் உயர் கல்வி கற்ற இளைஞர்களிடையே அதிக வேலையின்மை வீதம் நிலவும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரைபடப் பகுப்பாய்வின்படி, இலங்கையில் இரண்டாம் நிலைக்குப் பிந்தைய உயர் கல்வியைப் பூர்த்தி செய்த 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை வீதம் சுமார் 43 சதவீதமாக உள்ளது.

ஒப்பீட்டளவில் இந்த வீதம் இந்தியாவில் 42 சதவீதமாகவும், பங்களாதேஷில் 36 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதுடன், சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏனைய பல ஆசிய நாடுகளில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

இலங்கையின் ஒட்டுமொத்த இளைஞர்களின் வேலையின்மை வீதம் சுமார் 22 சதவீதமாக நிலவுகிறது. ஆனால், நாட்டில் உள்ள அனைத்து வயதினருக்குமான பொதுவான வேலையின்மை வீதம் 4 சதவீதமாக மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உயர் கல்வித் தகுதி பெற்ற அனைத்து வயதினரையும் கணக்கில் கொள்ளும்போது இலங்கையில் வேலையின்மை வீதம் 6 சதவீதமாகக் காணப்படுகிறது.

இது உயர் கல்வி கற்ற இளைஞர்களிடையே காணப்படும் வேலையின்மை வீதத்தை விட மிகக் குறைவானதாகும்.

பட்டம் பெற்ற இளம் பட்டதாரிகள் வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் கல்வித் தகுதிக்கும் கிடைக்கப்பெறும் வேலைகளுக்கும் இடையிலான பொருத்தமின்மையே இதற்குக் காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வரைவிலக்கணத்தின்படி, 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் ‘இளைஞர்கள்’ என்றும், இரண்டாம் நிலைக்குப் பிந்தைய கல்வி ‘உயர் கல்வி’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106