கடனை மீள செலுத்துவது தொடர்பில் இதுவரை அபாய மட்டத்திலேயே உள்ளது – IMF மதிப்பீடு!

Monday, September 21st, 2026


….
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை (கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன்) தற்போதிருந்த போதிலும், அது தொடர்பான அபாயங்கள் இன்னமும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளதாக ‘திவைன ஞாயிறு பதிப்பிற்கு’ தெரியவந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வட்டாரங்களின்படி, எதிர்வரும் (2027) மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடையும் சந்தர்ப்பத்திலும் கூட இந்த உயர் அபாய நிலை காணப்படும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவினால் 2026 மே 28 அன்று இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலும், கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் நிலையை எட்டியுள்ள போதிலும், கடன் நிலைபேறுதன்மை தொடர்பான அபாயங்கள் உயர் மட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த வியாழக்கிழமை (17) முற்பகல் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது, நாடு அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்தரத்தை இலகுபடுத்தவும் உயர்த்தவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், 2027 ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என்று சில பொருளாதார மற்றும் நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் உட்புறத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2027 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் திட்டம் ஒன்றிற்குச் செல்வது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றே அரசாங்க வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106