இலங்கை அணி தொடர் தோல்வி – அணி வீரர் உடற்தகுதி குறித்து  குமார் சங்கக்கார கேள்வி!

Saturday, September 19th, 2026

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி மீண்டும்  தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அணியின் வீரர் தேர்வு, முடிவெடுப்பதில் நிலைத்தன்மை மற்றும் உடற்தகுதி குறித்து முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டிக்குப் பின்னரான ஆய்வின்போது கருத்து தெரிவித்த சங்கக்கார, இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் இரு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக துடுப்பாட்டம், உடற்தகுதி மற்றும் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயற்படும் திறன் ஆகியவற்றில் இலங்கை அணி முன்னேற்றம் காண வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கமில் மிஷாரவை மூன்றாவதாக களமிறக்கியதுடன், இலங்கையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக தான் கருதும் மகீஷ் தீக்ஷனவை அணியில் சேர்க்காதது குறித்தும் சங்கக்கார கேள்வி எழுப்பினார்.

சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்கான பகுதிகளை புரிந்துகொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உடற்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதுடன், துடுப்பாட்டத் திறனை பாதிக்காமல் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் திறனையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சில் போட்டி சூழ்நிலைகளை புரிந்துகொள்வது, அதற்கேற்ற உத்திகளை வகுப்பது மற்றும் களத்தடுப்பு அமைப்புகளை மாற்றியமைப்பது போன்ற அம்சங்களிலும் முன்னேற்றம் தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106