மகிந்த தேசப்பிரிய மானசீகமாக நேசிக்கும் தலைவர் டக்ளஸ்!
Thursday, September 17th, 2026
…..
வியந்து பார்த்து மானசீகமாக கொண்டாடுகின்ற தலைவர்களுள் டக்ளஸ் தோவானந்தாவும் ஒருவர் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆண்டிற்கான ஜனநாயகத் தின விழாவில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நலன் விசாரித்த போதே, மகிந்த தேசப்பிரிய அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மங்கள விளக்கேற்றியிருந்தார்.
இதன்போது செயலாளர் நாயகத்துடன் அளவலாவிய முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்,
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தின் செயற்பாடுகளை நீண்ட காலமாக அவதானித்து வருவதாகவும், அந்தவகையில் மானசீகமாக தான் நேசிக்கின்ற தலைவர்கள் இருவருள் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர் எனத் தெரிவித்ததுடன், இறுதியாக நடைபெற்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு தமிழ் மக்களின் துரதிஸ்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்துடன் கட்சி முக்கியஸ்தர் சட்டத்தரணி சண். சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டார்.





000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106