சுயபொருளாதாரத்தில் தமிழ் மக்கள் வலுவடைவதைத் தடுக்க நினைத்தவர்களுக்கு சாவுமணி – ஈ.பி.டி.பி. கூட்டத்தில் தெரிவிப்பு!.

Saturday, September 12th, 2026


…..

சுயபொருளாதாரத்தின் மூலம் தமிழ் மக்கள் வலுவடைந்து விடக்கூடாது என்ற சிந்தனைக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரோபாயமான வேலைத்திட்டங்களின் ஊடாக சாவுமணி அடிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த
கூட்டத்தில் வேலணை பிரதேச சபையின் செயற்பாடுகள், கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பிரதேச மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, புகையிலைச் செய்கை கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் எதிர்கால நிலைமை, பிரதேச சபைக்கு உட்பட்ட குளங்களை அபிவிருத்தியின் நிலஒமைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேலும், எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் வேலணை பிரதேசத்தில் கடலட்டை பண்ணைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதன்போது, டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் கடலட்டை பண்ணைகளை விஸ்தரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, அல்லைப்பிட்டி பிரதேச மக்கள் கணிசமான பொருளாதார நன்மைகளைப் பெற்று வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இளைஞர்கள் சமூகப் பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடலட்டை வளர்ப்பு உள்ளிட்ட கடற்றொழில் சார்ந்த தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அவர்களுக்கான வருமான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக்கூடாது என்ற சிந்தனைக்கு கடலட்டை பண்ணைகளின் பெருக்கமும் அதன் மூலம் உருவாகியுள்ள பொருளாதார வாய்ப்புகளும் சவாலாக அமைந்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டத்தில் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, வேலணை பிரதேசத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை வட்டாரப் பிரதிநிதிகள் அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தியதுடன்
அவ்வாறு அடையாளம் காணப்படும் பிரச்சினைகளை பிரதேச சபை உறுப்பினர்களின் ஊடாக உரிய மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும், மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் வட்டாரப் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106