அயல்நாடுகளை எப்போதும் மாற்ற முடியாது – கொழும்பில் இந்திய அமைச்சர்!
Thursday, September 10th, 2026
.
“வாழ்க்கையில் எல்லாமே மாறலாம், ஆனால் அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது.
வாழ்க்கையில் நண்பர்கள் மாறலாம், ஆனால் அயல்நாடுகள் மாறவே முடியாது” என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையை இந்தியாவின் மிக நெருங்கிய நண்பராக இந்தியா கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இலங்கைகை வந்தடைந்தார்.
இந்தநிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சமூகம் சார்ந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இந்தியா தனது முழு பலத்துடன் இலங்கைக்குத் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
இந்தியாவின் நீண்டகால பாரம்பரியம் தனது அயல்நாடுகளைக் குடும்ப உறுப்பினர்களாக நடத்துவதுதான் என்று கூறிய அவர்இ இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று மற்றும் நாகரிக உறவுகளை கோடிட்டுக் காட்டினார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியா உறுதுணையாக நின்றதை அவர் நினைவுகூர்ந்தhர்.
எதிர்காலத்திலும் எந்தவொரு நெருக்கடியின்போதும் இலங்கை அரசுடன் இந்தியா முழு பலத்துடன் நிற்கும் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங் தனது இந்தப் பயணத்தின் போது இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சுமார் நான்கு தசாப்தங்களில் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இந்திய அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106