தொடர் தோல்வி – பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்!
Sunday, September 6th, 2026
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அணியின் ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக சிரேஷ்ட வீரர்களான மொஹமட் ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் தொடரின் பாதியிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணங்களின் போது பாகிஸ்தான் அணியின் வீரர்கள் வெளிப்படுத்திய ஒழுக்கக்கேடான நடத்தை மற்றும் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொஹமட் ரிஸ்வான் போதிய ஒட்டங்கள் எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், இமாம் உல் ஹக் காயம் காரணமாக என்ற பெயரில் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியைத் தவிர்த்ததும் அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்ட வீரர்கள் விசாரணைக் குழுவில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் தோல்விகளைத் தொடர்ந்து பயிற்சிவிப்பாளர் சர்பராஸ் கான் நீக்கப்பட்டு, மைக் ஹெசன் இடைக்கால பயிற்சிவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழு உறுப்பினர் மிஸ்பா உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் தேர்வுக் குழு தலைவர் ஆகிப் ஜாவேத்தின் பதவியைப் பறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106