தமிழகத்திலிருந்து தலைமன்னார் வந்த எட்டு பேர் இலங்கை கடற்படையினரால் மீட்பு!
Sunday, September 6th, 2026
……..
தமிழகத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதைக் கடற்படையினர் இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106