வடக்கின் மாபெரும் மோட்டார் வாகனக் கண்காட்சி நாளை யாழில் ஆரம்பம்!

Thursday, September 3rd, 2026


……
வடக்கின் மோட்டார் வாகன உலகில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள AUTO X – JAFFNA MOTOR SHOW 2026 மாபெரும் மோட்டார் வாகனக் கண்காட்சி நாளை (04) யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இடம்பெறவுள்ள இந்த பிரம்மாண்ட மோட்டார் வாகனக் கண்காட்சியை முன்னிட்டு, இன்று (03) யாழ்ப்பாண நகரில் வாகனங்களின் வாகன அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது.

இந்த வாகன அணிவகுப்பில் AUTO X – JAFFNA MOTOR SHOW 2026 கண்காட்சியில் பங்கேற்கவுள்ள பழமை வாய்ந்த வாகனங்களுடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Car Clubs, Bike Clubs, Classic Vehicle Clubs மற்றும் வாகன ஆர்வலர்களும் உற்சாகமாக இணைந்திருந்தனர்.

யாழ்ப்பாண நகரின் முக்கிய வீதிகளூடாக இடம்பெற்ற இந்த வாகன அணிவகுப்பு பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்ததுடன், கண்காட்சியின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் புதிய தொழில்நுட்பங்கள், நவீன வாகனங்கள், வாகன அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒரே இடத்தில் பார்வையிடுவதற்கான வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 04, 05 மற்றும் 06 செப்டம்பர் 2026 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சிக்கு 15,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் மோட்டார் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், வாகன உரிமையாளர்கள், வாகன ஆர்வலர்கள், Car Clubs மற்றும் Bike Clubs உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் தளமாகவும் இந்தக் கண்காட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் மோட்டார் வாகனக் கலாசாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக AUTO X – JAFFNA MOTOR SHOW 2026 அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாளை ஆரம்பமாகும் இந்த மூன்று நாள் மோட்டார் வாகனக் கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் மோட்டார் வாகன ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும் நிகழ்வாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106