தர்மலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டமுக்கிய விடயம்!

Thursday, September 3rd, 2026


………
தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் தமிழ் அரசியல் தரப்புகளால் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்கள் மற்றும் அரசியல் தளங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் தலைவர்களாக் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமரர் தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தினம் இன்று (02) யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் இராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சகோதரப் படுகொலையில் உயிரிழந்த அமரர் தர்மலிங்கத்தின் அரசியல் பங்களிப்புகள், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக அவர் முன்னெடுத்த அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் நினைவுகூரப்பட்டது.

இதன்போதே, தமிழ் மக்களின் சார்பான பிரச்சினைகள் குறித்து ஏனைய தமிழ் அரசியல் தரப்புகள் இணைந்து கலந்துரையாடும் அரசியல் தளங்களில் ஈ.பி.டி.பியும் பங்கேற்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து ஓரணியாக செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான காணி விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபை தேர்தலை நடத்தி 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், காணாமல் போனோருக்கான பரிகாரம்,
மற்றும் நடைமுறை சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் பரந்துபட்ட அரசியல் ஒத்துழைப்பும் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமான நிலையில், அந்த முயற்சிகளில் ஈ.பி.டி.பியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையும் எனவும் நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106