தமிழ் தேசிய தலைவரின் பிறந்ததின நிகழ்வில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!

Sunday, August 30th, 2026


……
தமிழ் தேசியத் தலைவர் அமிர்தலிங்கத்தின் 99 ஆவது பிறந்த தின பேருரை நிகழ்வில் அவருடன் இறுதிக் காலத்தில் நெருக்கமாக இணைந்து பயணித்தவரும் இன்றைய மூத்த தமிழ் அரசியல் தலைவருமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தார்.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யபட்ட குறித்த நிகழ்வு நேற்று (29) யாழ் நூலக அரங்கில் நடைபெற்றது.

புளொட் அமைப்பின் தலைவரும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவுகூரல் நிகழ்வில் சிரேஸ்ர ஊடகர் வீரகத்தி தனபாலசிங்கம்,
யாழ் பல்கலை சட்டத்துறையின்  தலைவர் கோசலை மதன்,
தேசிய சமாதான பேரவை தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா ஆகியோர் நினைவுகளை பகிர்ந்து நினைவுகூரியிருந்தனர்.

குறிப்பாக தமிழரின் தேசிய தலைவராக இருந்து அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து
நாட்டுக்கு ஆற்றிய சேவையுடன்
13 ஆவது திருத்தச் சட்டம் உருவாகுவதற்கு அவரது பங்களிப்பும் அதற்காக அவர் கொடுத்த முக்கியத்துவமும் மீட்டிப் பார்க்கப்பட்டதுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்த்கும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன்

குறிப்பாக அமிர்தலிங்கத்தின் 99ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வு, அவரது நீண்டகால அரசியல் பயணத்தையும் தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் மீட்டுப் பார்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் உறவினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106