சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலையின் எல்லைப் பகுதி – உயர் எச்சரிக்கையில் நேபாளம்!
Sunday, August 30th, 2026
….
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இமயமலை எல்லைப் பகுதி “சேறும் சகதியுமாக” மாறிவரும் நிலையில், நேபாளம் மேலும் பல வெள்ளப்பெருக்கு அபாயங்கள் குறித்து “மிகப்பெரிய உயர் எச்சரிக்கையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை அன்று நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 600 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 2,426 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை அடைவதற்கு மீட்புக் குழுவினருக்கு இடையூறாக மாறியுள்ளது.
நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் உட்பட, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தங்களது அன்புக்குரியவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
திபெத்தின் நிலவரம் குறித்து சீன அரசு ஊடகங்களின் செய்திகளையே எதிர்பார்க்கவேண்டியுள்ளதால், களத்தகவல்களை உடனுக்குடன் பெறமுடியவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106