பன்முக நெருக்கடியில் நாட்டு மக்கள் – 55.7% பேர் பாதிப்பு என வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Saturday, August 29th, 2026


…
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பன்முக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக தினன தகுன அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, நாட்டின் வறுமை விகிதம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதுடன், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன் பெறவோ அல்லது தங்களது பொருட்களை அடகு வைக்கவோ தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வறுமை குறைந்து வருவதாகவும், திறைசேரியின் வருமான நிலை மேம்பட்டுள்ளதாகவும் அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், வெளியிடப்பட்டுள்ள இந்தத் தரவுகள் மக்களின் உண்மையான வாழ்க்கை நிலைமை தொடர்பாக வேறுபட்ட ஒரு கள யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக தினன தகுன அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பொருளாதார அறிவிப்புகளுக்கும், சாதாரண உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தர வீழ்ச்சிக்கும் இடையே கவலைக்குரிய இடைவெளி காணப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, கொள்வனவுத் திறன் சமநிலை முறையில் தயாரிக்கப்பட்ட உலகளாவிய குறைந்தபட்ச ஊதியச் சுட்டெண்ணில், 130 நாடுகளில் இலங்கை 120 ஆவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் உண்மையான கொள்வனவுத் திறனை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச ஊதியம் மாதம் 200 அமெரிக்க டொலர்களாக மட்டுமே பதிவாகியுள்ளது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானில் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 570 டொலர்களாகவும், நேபாளத்தில் 490 டொலர்களாகவும், பங்களாதேஷில் 379 டொலர்களாகவும், இந்தியாவில் 233 டொலர்களாகவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரியை விரிவுபடுத்துதல், மறைமுக வரிகளை உயர்த்துதல் மற்றும் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமே அரசாங்கம் உபரி வருவாயை எட்டியுள்ளதாகவும் தினன தகுன அமைப்பு தெரிவித்துள்ளது.

நிதிக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என்றாலும், குடும்பங்களின் உண்மையான வருமானத்தை நெருக்கடிக்குள்ளாக்கி எட்டப்படும் இலக்குகளை உண்மையான பொருளாதார வெற்றியாகக் கருத முடியாது என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியம் என்பது வெறும் நிதி இலக்குகளை எட்டுவதால் மட்டுமே தீர்மானிக்கப்படக்கூடாது என்றும், உண்மையான ஊதிய வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மக்களின் கொள்வனவுத் திறன் இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்வதே உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106