தரவு முறைமையில் ஏற்பட்ட கோளாறு தொழில் நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதி – பொலிஸ் ஊடகப் பிரிவு! .

Thursday, August 27th, 2026

காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில் காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி பிற்பகல் 12.50 மணியளவில் குறித்த தரவு முறைமை செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் முறைமை மீளமைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆகஸ்ட் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தரவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அன்றையதினம் விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியில் மீண்டும் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய விண்ணப்பத்திற்கான உரிய அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.5,100 கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்த பயன்படுத்திய கடன் அட்டைக்கு மீளச் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106