நேபாளத்தை உலுக்கிய வெள்ள அனர்த்தம் – உயிரிழப்பு 95 ஆக உயர்வு!

Wednesday, August 26th, 2026

நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தின் ராசுவா உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் வீடுகள், பாலங்கள், வீதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

பனிக்கட்டி மற்றும் பாறைகள் சரிந்து ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்து, பின்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு இந்த பேரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மோசமான காலநிலை மற்றும் சேதமடைந்த வீதிகள் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106