வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பிரமாண்ட மஞ்சத் திருவிழா!

Tuesday, August 25th, 2026


……
வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 8ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது, சுமார் 33 அடி உயரம் கொண்ட, அதி சிறப்பு வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டுமானம் செய்யப்பட்ட பிரமாண்ட மஞ்சத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆலயத்தின் 8ஆம் திருவிழா உபயகாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த மஞ்சம், தீவகப் பகுதியில் உள்ள ஆலயங்களில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள உயரமான மஞ்சங்களில் ஒன்றாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய சிறப்பையும் நவீன கலைநயத்தையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட மஞ்சத்தில் அம்பாள் எழுந்தருளிய காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், அதன் வருடாந்த மகோற்சவம் தீவக மக்களின் சமய மற்றும் பண்பாட்டு மரபுகளுடன் இணைந்த முக்கிய நிகழ்வாகவும் இடம்பெற்று வருகிறது.
00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106