117 வயது – உலகின் மிக வயதான பெண்மணி!
Monday, August 24th, 2026
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் திகதி பிறந்த எத்தல், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார்.
இவர் இரண்டு உலகப் போர்களையும் கடந்து, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான உலகளாவிய மாற்றங்களை அனுபவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே இவர் பிறந்துவிட்டார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் கோவிட்-19 தொற்று (தனது 110-வது வயதில்) ஆகியவற்றிலிருந்து உயிர் பிழைத்துள்ளார்.
யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது, பிறர் கூறுவதைக் கேட்பது மற்றும் தனக்கு விருப்பமானதைச் செய்வது மட்டுமே தன் நீண்ட ஆயுளின் ரகசியம் என்று அவர் கூறுகிறார்.
117 வயதிலும் “அடுத்த வருடம் என்ன வரும் என்று பார்க ஆவலாக இருக்கிறேன்” என்று சொல்லும் எதேல் பாட்டி, நமக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையும், பிடிவாதத்தையும் கற்றுத் தருகிறார்.இவரின் வாழ்க்கை சொல்லும் ஒரே வரி “வயது உடலை தளர்த்தலாம், ஆனால் மனதை அல்ல”.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106