முச்சக்கரவண்டி சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்து நடடிக்கை!
Monday, August 24th, 2026
இலங்கையில் முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுபவர்களின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை படிப்பை முடித்தவுடன் இளைஞர்கள் உடனடியாக முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழையக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அவர்களை கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை நோக்கி வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் நுழைவதற்கான வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்கள் பாடசாலை படிப்பை முடித்தவுடன் உடனடியாக முச்சக்கர வாகனத்தை வீதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும், அதனால் கல்வியில் மாற்றங்களை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106