வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

Friday, August 21st, 2026


……
​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

​வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

​இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.08.2026) பலாலியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​இதன் தொடர்ச்சியாக, பலாலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று (21) அழைக்கபட்ட அனுஷியா ஜெயகாந்திடம் பொலிஸார் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

​இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர்.

​இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

​



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106