இலங்கையுடன் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து!
Thursday, August 20th, 2026
ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 21 ஆம் திகதி வரை மூன்று அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடர் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அட்டவணைக்காக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளைத் தமது நாட்டுக்கு வரவேற்கவுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை அணி ஒக்டோபர் 4 ஆம் திகதியன்று பாகிஸ்தானைச் சென்றடையும். அத்துடன், ஒக்டோபர் 9, 11 மற்றும் 13 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று இருபதுக்கு 20 போட்டிகளுடன் தமது சுற்றுப்பயணத்தை இலங்கை அணி ஆரம்பிக்கவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் இறுதிப் போட்டி உட்பட ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த முத்தரப்புத் தொடர் ஒக்டோபர் 18 அன்று ராவல்பிண்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதும் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 20 அன்று பாகிஸ்தானும் இங்கிலாந்தும், ஒக்டோபர் 22 ஆம் திகதி இலங்கையும் இங்கிலாந்தும் மோதவுள்ளன.
பின்னர் இத்தொடர் லாகூருக்கு மாற்றப்பட்டு, அங்கு ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று பாகிஸ்தான் இங்கிலாந்தையும், ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கையையும் எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் ஒரு போட்டியில் பங்கேற்கவுள்ளன.
இத்தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி அன்று கடாபி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
முத்தரப்புத் தொடரைத் தொடர்ந்து, நவம்பர் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இஸ்லாமாபாத்தில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ளது.
இதன்படி, முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை லாகூரில் உள்ள கடாபி மைதானத்திலும் நடைபெறும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ளன.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106