வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம் – 11 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!
Wednesday, August 19th, 2026
…….
வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிப்படைத் தகுதிகளாக 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
மேலும் க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25இற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் – கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106